இந்தியா

தில்லி மாநகராட்சி தேர்தலுக்குத் தடை கோரிய மனு தள்ளுபடி! 

2nd Dec 2022 01:11 PM

ADVERTISEMENT

 

தில்லி மாநகராட்சித் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

டிசம்பர் 4-ஆம் தேதி தில்லி மாநகராட்சியின் 250 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநகராட்சி தேர்தலை ரத்து செய்யக் கோரி தேசிய இளைஞர் கட்சி சார்பில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. 

நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கௌல் மற்றும் அபய் எஸ் ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு, காலப்போக்கில் இந்த மனு பயனற்றதாக மாறியுள்ளதாகத் தெரிவித்தனர். 

ADVERTISEMENT

படிக்க: மாநகராட்சி தேர்தல்: தில்லியில் காலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் சேவைகள்!

ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இந்த நேரத்தில் தாங்கள் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்தனர். 

மாநகராட்சி தேர்தலில் தலையிட மறுத்து நவம்பர் 9ம் தேதி தில்லி உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை எதிர்த்து மனுதாரர் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT