இந்தியா

ம.பி.யில் 10வது நாளாக ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடர்ந்த ராகுல்! 

2nd Dec 2022 12:13 PM

ADVERTISEMENT

 

மத்தியப் பிரதேசத்தின், உஜ்ஜைனியில் உள்ள ஜஹானாரா கிராமத்தில் இருந்து ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மீண்டும் தொடங்கினார்

காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரையின் 86வது நாளான இன்று மத்தியப் பிரதேசத்தில் பத்தாவது நாளாக நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
இன்று உஜ்ஜைனியில் இருந்து அகர் மால்வா மாவட்டத்தில் உள்ள அகர் சவானி சதுக்கத்தில் யாத்திரை செல்கிறது. 

முன்னதாக, உஜ்ஜைனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜக தலைமையிலான மத்திய அரசைக் கடுமையாகத் தாக்கி, உழைத்து சம்பாதிப்பவர்களுக்கு அரசிடமிருந்து எதுவும் கிடைப்பதில்லை.

ADVERTISEMENT

இந்தியா எப்போதும் சன்னியாசிகளின் நாடாக இருந்து வருகிறது. இந்து மதத்தில் தபஸ்விகள் ‘எப்போதும் வழிபடப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அரசிடம் இருந்து எதுவும் கிடைக்காது என்றார். 

படிக்க: கலகலப்பால் திணறடிக்கும் கட்டா குஸ்தி: திரைவிமர்சனம்

பாரத் ஜோடோ யாத்திரை டிசம்பர் 5ஆம் தேதி ராஜஸ்தானில் நுழைகிறது.
யாத்திரை இதுவரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வத்ராவுடன் கடந்த வாரம் யாத்திரையில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT