இந்தியா

'சத்யேந்தர் ஜெயினுக்கு வேலை செய்ய போக்சோ குற்றவாளிகளுக்கு நிர்பந்தம்'

2nd Dec 2022 01:32 PM

ADVERTISEMENT

 

திகார் சிறையில் உள்ள தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்வது உள்ளிட்ட வேலைகளைச் செய்யுமாறு போக்சோ குற்றவாளிகள் உள்பட ஐந்து பேருக்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் மிக முக்கிய நபர்களுக்கான சலுகை அளிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் விசாரணை நடத்த அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 கைதிகள் சத்யேந்தர் ஜெயினுக்குத் தேவையான வேலைகளை செய்யுமாறு திகார் சிறை நிர்வாகத்தால் நிர்பந்திக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க.. அஃப்தாப்பிடம் உண்மை கண்டறியும் சோதனை: இது எப்படி நடத்தப்படும்?

ADVERTISEMENT

சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் கிடைக்க சிறைத் துறை அதிகாரிகள் வழிவகை செய்திருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது விசாரணைக் குழு.

சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரிங்கு என்பவர், சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்யும் விடியோ கடந்த வாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இது குறித்து ரிங்கு அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், ஜெயினுக்கு மசாஜ் செய்யுமாறு சிறைத் துறை அதிகாரிகள் எனக்கு அறிவுறுத்தினர். தற்போது என்னை மிரட்டுகிறார்கள். சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்தபோது, அங்கிருந்த ஒரு சொட்டுத் தண்ணீரைக் குடிக்கக் கூட நான் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, கடந்த மே 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். 

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2017-ஆம் ஆண்டில் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக சிபிஐ எஃப்ஐஆா் பதிவு செய்தது. அதன் அடிப்படையில், பணமோசடி வழக்கில் சத்யேந்தா் ஜெயின் மற்றும் இருவரை அமலாக்க இயக்குநரகம் கைது செய்தது. மேலும், அவருடன் தொடா்புடையதாகக் கூறப்படும் நான்கு நிறுவனங்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்யேந்தர் ஜெயின் பின்னர் திகார் சிறைக்கு மாற்றப்பட்டார். 

திகார் சிறையில் உள்ள அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், மசாஜ் செய்துகொள்வது, அறுசுவை உணவை உண்பது உள்ளிட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகின. வெவ்வேறு நாள்களில் பதிவான  இந்த விடியோக்கள் அடுத்தடுத்த நாள்களில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது.

அதோடு மட்டுமல்லாமல், சிறை அறையில் குடிநீர் பாட்டில்கள் இருப்பதும், சில ஆவணங்களைப் படுத்தவாறு சரிபார்ப்பதும், காவல்துறை அதிகாரிகளை சந்திப்பதும், வகைவகையான உணவுகளை (வெரைட்டி ரைஸ்) உண்பது போன்றும் அடுத்தடுத்து விடியோக்கள் வெளியாகின. 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என திகார் சிறைக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT