இந்தியா

தேர்தல் முடியும் முன்பே தோல்வியை ஒப்புக்கொண்ட காங்கிரஸ்: பிரதமர் மோடி

2nd Dec 2022 06:22 PM

ADVERTISEMENT

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு என காங்கிரஸ் குறை கூறுவதன் மூலம் தேர்தல் முடிவதற்கு முன்பே தனது தோல்வியை காங்கிரஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு நேற்று (டிசம்பர் 1) நடைபெற்றது. அடுத்தகட்டத் தேர்தல் டிசம்பர் 5ல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு என காங்கிரஸ் குற்றம் சுமத்துவது, தேர்தல் முடிவதற்கு முன்பே அதன் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ரம்யா பாண்டியனின் புதிய தோற்றம்! ஒரே நாளில் 62 ஆயிரம் லைக்குகள்!

இது குறித்து அவர் பேசியிருப்பதாவது: காங்கிரஸ் வாக்குப் பதிவு இயந்திரங்களை குறைகூற ஆரம்பித்துவிட்டது. இதன்மூலம் தேர்தல் முடிவதற்கு முன்பே தனது தோல்வியைக் காங்கிரஸ் ஒப்புக் கொண்டுள்ளது. பாஜக தேர்தலில் வெற்றி பெறும் என காங்கிரஸுக்கு தெரிந்துவிட்டது. காங்கிரஸுக்கு இரண்டு விஷயங்கள் மட்டுமே தெரியும். ஒன்று, தேர்தலுக்கு முன் மக்களிடம் அவர்களை மகிழ்விப்பது போல பேசுவது. மற்றொன்று, தேர்தல் முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களை குறை கூறுவது. இதிலிருந்து காங்கிரஸ் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது நிரூபணமாகிறது. ஏழை, பணக்காரர்களுக்கான இடைவெளியை காங்கிரஸ் அதிகப்படுத்தியுள்ளது. ஏழை, எளிய மக்களுக்கான நலத்திட்டங்களுக்காக உள்ள நிதியினை காங்கிரஸ் அவர்களது ஆட்சியில் கொள்ளையடித்து வந்தது என்றார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: 'வாரிசு' திரைப்படத்தின் அப்டேட்

டிசம்பர் 5-ல் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT