இந்தியா

காங்கிரஸ் அடிமை மனப்பான்மையைப் பெற்றுள்ளது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

2nd Dec 2022 07:10 PM

ADVERTISEMENT

சுதந்திரத்துக்கு முன்னதாக ஆங்கிலேயர்களுடன் இணைந்து வேலை செய்ததால் காங்கிரஸுக்கு அடிமை மனப்பான்மை வந்துவிட்டதாகவும், சர்தார் வல்லபாய் படேலை தங்களில் ஒருவராக காங்கிரஸ் நினைக்கவில்லை எனவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

இரண்டாம் கட்டத் தேர்தலில் வாக்குப் பதிவினை சந்திக்கவிருக்கும் குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் இதனை தெரிவித்தார்.

இதையும் படிக்க: முன்னதாகவே முடிவடையும் ராகுலின் நடைப்பயணம்? காரணம் இதுதானா?


இந்த பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: காங்கிரஸுக்கு சர்தார் படேலுடன் மட்டுமில்லாமல் இந்திய ஒற்றுமையுடன் பிரச்னை இருந்துள்ளது. ஏனேனில், அவர்களது அரசியல் ஆங்கிலேயர்களைப் போன்று பிரித்தாளும் கொள்கையைச் சார்ந்தது. இந்த வித்தியாசத்தின் காரணத்தினால் சர்தார் படேலை காங்கிரஸ் தங்களில் ஒருவராக பார்க்கவில்லை. காங்கிரஸ் ஒரு வகுப்பைச் சார்ந்த மக்களை மற்றொரு வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக திருப்பி அரசியல் செய்து குஜராத்தினை வலிமையிழக்கச் செய்தது. காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக ஆங்கிலேயர்களுக்கு கீழ் வேலை பார்த்துள்ளனர். அதன் விளைவாக ஆங்கிலேயர்களின் கெட்டப் பழக்கங்கள், பிரித்தாளும் கொள்கை மற்றும் அடிமை மனப்பான்மை காங்கிரஸுக்கும் வந்துவிட்டது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: திருமணத்தில் சாப்பிட்டது குற்றமா? பாத்திரம் கழுவிய எம்பிஏ மாணவர்

எதிர்க்கட்சித் தலைவர்கள் நர்மதாவில் ஒற்றுமைக்காக அமைக்கப்பட்ட சர்தார் படேலின் சிலையை வந்து பார்ப்பதில்லை. அதற்கு காரணம் அந்த சிலை மோடியினால் கட்டப்பட்டது. மோடியினால் கட்டப்பட்டதால் சர்தார் படேல் உங்களுக்குத் தீண்டத் தகாதவராக மாறிவிட்டாரா? சர்தார் படேலை அவமதிப்பதற்காக ஆனந்த் மாவட்ட மக்கள் காங்கிரஸை தண்டிப்பார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றார்.


குஜராத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் டிசம்பர் 5-ல் நடத்தப்பட்டு டிசம்பர் 8-ல் முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT