இந்தியா

2021 லூதியாணா நீதிமன்ற குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது

2nd Dec 2022 07:55 AM

ADVERTISEMENT


புது தில்லி: 2021ஆம்ஆண்டு லூதியாணா நீதிமன்றத்தில் குண்டுவெடித்த சம்பவத்தில் தொடர்புடைய தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி தில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டதை தேசிய புலனாய்வு முகமை வெள்ளியன்று உறுதி செய்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸைச் சேர்ந்த ஹர்பிரீத் சிங் பற்றி துப்புக் கொடுத்தால் ரூ.10 லட்சம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோலாலம்பூரிலிருந்து இந்தியா திரும்பியபோது, விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் என்று என்ஐஏ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

லூதியாணாவில் உள்ள நீதிமன்றக் கட்டடத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் ஒருவர் பலியானார், ஆறு பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT