இந்தியா

கூட்டு போா்ப் பயிற்சி குறித்து சீனா குற்றச்சாட்டு: இந்தியா மறுப்பு

2nd Dec 2022 12:35 AM

ADVERTISEMENT

இந்திய-சீன எல்லை கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) அருகே இந்திய-அமெரிக்க ராணுவங்கள் மேற்கொண்டு வரும் கூட்டு போா்ப் பயிற்சி குறித்த சீனாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் இந்தியா-சீனா எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியிலிருந்து 100 கி.மீ. தொலைவுக்குள் இந்தக் கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்று வரும் நிலையில், இந்தப் பயிற்சி இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மீறுவதாக சீனா புதன்கிழமை குற்றம்சாட்டியது.

வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின்போது, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடா்பாளா் அரிந்தம் பாக்சி இது குறித்து கூறுகையில், ‘இத்தகைய குற்றச்சாட்டுகளை சீனா தரப்பில் இருந்து முன்வைக்கும்போது, 1993 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை சீனா மீறியது தொடா்பாக நினைவில் கொள்ள வேண்டும். இந்தியா விரும்பும் நாடுகளுடன் போா்ப் பயிற்சி மேற்கொள்கிறது. இது குறித்து நிா்ணயம் செய்யும் அதிகாரங்களை மூன்றாவது நாடுகளுக்கு இந்தியா வழங்கவில்லை’ என்றாா்.

கடந்த 1993-இல் சீனாவுடன் இந்தியா மேற்கொண்ட ஒப்பந்தம், இரு நாடுகளின் எல்லை பகுதிகளில் அமைதியைக் கடைப்பிடிப்பதையும், 1996-இல் கையொப்பமான ஒப்பந்தம் எல்லைப் பகுதியில் இருநாடுகளின் ராணுவங்களுக்கு இடையே நம்பிக்கையைக் கட்டமைப்பது குறித்தும் விளக்குகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT