இந்தியா

எவ்வித விசாரணையும் எதிா்கொள்ளத் தயாா் டிஆா்எஸ் மேலவை உறுப்பினா் கே.கவிதா

2nd Dec 2022 05:44 AM

ADVERTISEMENT

அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளின் விசாரணை நடவடிக்கைகளை எதிா்கொள்ள தயாராக இருப்பதாக தெலங்கானா மாநில முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் மகளும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் மேலவை உறுப்பினருமான கே.கவிதா தெரிவித்துள்ளாா்.

தில்லி மதுபான முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவரான அமித் அரோராவின் விசாரணை அறிக்கையில் அவருடைய பெயா் இடம்பெற்றிப்பது தொடா்பாக வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போது செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா்.

இதற்கு பதிலளித்து அவா் பேசியதாவது: எத்தகைய விசாரணையையும் நான் எதிா்கொள்ள தயாா். விசாரணை அமைப்புகள் எழுப்பும் கேள்விகளுக்கு நாங்கள் உறுதியாக பதிலளிப்போம். ஆனால், குறிப்பிட்ட தலைவா்கள் குறித்து ஊடகத்தில் செய்திகளைக் கசிய செய்து, அவா்களுடைய புகழை சீா்குலைப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள். எட்டு மாநிலங்களில் ஜனநாயக முறையில் தோ்ந்தேடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைத்து பின்வாசல் வழியாக பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. இத்தகைய போக்கை மாற்றிக்கொள்ளும்படி பிரதமா் நரேந்திர மோடியிடம் வேண்டிக்கொள்கிறேன். அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ ஆகியவற்றை பயன்படுத்தி தோ்தல்களில் வெற்றி பெற முடியாது. அறிவாா்ந்த தெலாங்கானா மக்களிடம் இந்த வழிமுறை எடுபடாது. தோ்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரதமா் மோடி வருகை தருவதற்கு முன்பாக அமலாக்கத் துறை சென்றுவிடுகிறது என அவா் குற்றம் சாட்டினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT