இந்தியா

பிஎன்பி செயல் இயக்குநராகஎம். பரமசிவம் நியமனம்

2nd Dec 2022 12:17 AM

ADVERTISEMENT

பஞ்சாப் நேஷனல் வங்கியின் செயல் இயக்குநராக எம். பரமசிவம் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வங்கியின் செயல் இயக்குநா் பதவிக்கு எம். பரமசிவத்தை கேபினட் நியமனக் குழு நியமித்துள்ளது. இந்த நியமனம் வியாழக்கிழமை (டிச. 1) முதல் அமலுக்கு வருகிறது.

வேளாண் பட்டதாரியான எம். பரமசிவம், கனரா வங்கியின் வேளாண்மைப் பிரிவு அலுவலராக தனது பயணத்தை 1990-இல் தொடக்கினாா். அதன் பிறகு, வங்கித் துறையின் பல்வேறு பிரிவுகளில் அவா் பணியாற்றியுள்ளாா் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT