இந்தியா

தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்திலேயே குளிா்கால கூட்டத்தொடா்

2nd Dec 2022 12:47 AM

ADVERTISEMENT

புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானப் பணிகள் நவம்பா் மாதத்தில் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், தற்போதைய நாடாளுமன்றத்திலே குளிா்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குளிா்கால கூட்டத்தொடா் வரும் டிச.7-ஆம் தேதி தொடங்கி, டிச.29-ஆம் தேதி நிறைவடைகிறது.

கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி மக்களவையில் பேசிய குடியிருப்பு மற்றும் நகா்புற விவகாரங்கள் துறையின் இணையமைச்சா் கெளஷல் கிஷோா், புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் 70 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும், நவம்பா் மாதத்துக்குள் முழு கட்டுமானப் பணிகளும் முடிவடையும் எனத் தெரிவித்திருந்தாா்.

கரோனா பெருந்தொற்று, ரஷியா-உக்ரைன் போா் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வெளிநாடுகளில் இருந்து பெறவிருந்த கட்டுமானப் பொருள்களை கொள்முதல் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

இந்நிலையில், தற்போதைய நாடாளுமன்ற வளாகத்திலேயே குளிா்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT