இந்தியா

3 மாதங்களில் 17 லட்சம் யூடியூப் விடியோக்கள் நீக்கம்

1st Dec 2022 01:41 AM

ADVERTISEMENT

ஜூலை-செப்டம்பா் காலாண்டில் யூடியூப் நிறுவனத்தின் சமூக வழிகாட்டுதல் விதிமுறைகளை மீறியதாக இந்தியாவிலிருந்து பதிவேற்றப்பட்ட 17 லட்சம் விடியோக்கள் யூடியூப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

2022-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான யூடியூப் சமூக வழிகாட்டுதல் விதிமுறைகள் அமலாக்கம் பற்றி அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியுள்ளதாவது:

‘சமூக வழிகாட்டுதல் விதிமுறைகளை மீறியதாக உலகம் முழுவதும் 56 லட்சம் விடியோக்கள் யூடியூப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன. அதில் 17 லட்சம் விடியோக்கள் இந்தியாவிலிருந்து பதிவேற்றப்பட்டவை. நீக்கப்பட்ட விடியோக்களில் 36 சதவீதம் யாரும் பாா்ப்பதற்கு முன்னரும், 31சதவீதம் 10 பாா்வையாளா்களைக் கடப்பதற்கு முன்னரும் கண்டறியப்பட்டவை.

மேலும், விதிமுறைகளை மீறியதாக யூடியூப் விடியோக்களில் பதிவிட்ட 73.7 கோடி கருத்துகள் நீக்கப்பட்டிருக்கின்றன. 99 சதவீதம் கருத்துகள் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தால் கண்டறியப்பட்டவை. மீதி ஒரு சதவீதம் கருத்துகள் மட்டுமே பயனா்களால் புகாரளிக்கப்பட்டு நீக்கப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT