இந்தியா

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் இணைந்த நடிகை ஸ்வர பாஸ்கர்!

1st Dec 2022 12:07 PM

ADVERTISEMENT

 

மத்தியப் பிரதேசத்தின், உஜ்ஜைனியில் நடைபெறும் காங்கிரஸ் ஒற்றுமை நடைப்பயணத்தில் இந்தி நடிகை ஸ்வர பாஸ்கர் கலந்துகொண்டுள்ளார். 

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முன்னெடுத்துள்ளார்.

கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிர மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது மத்தியப் பிரதேசத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 

ADVERTISEMENT

யாத்திரையில் 83-வது நாளான இன்று உஜ்ஜைனியில் நடைப்பயணம் மேற்கொள்ளும் ராகுலுடன், நடிகை ஸ்வர பாஸ்கர் பங்கேற்றுள்ளார். 

இந்தியத் தேசிய காங்கிரஸின் அதிகாரப்பூர்வ சுட்டுரை பக்கத்தில் காந்தியுடன் ஸ்வர பாஸ்கர் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

முன்னதாக, அமோல் பலேகர், சந்தியா கோகலே, பூஜா பட், ரியா சென், சுஷாந்த் சிங், மோனா அம்பேகான்கர், ரஷ்மி தேசாய் மற்றும் அகன்ஷா பூரி போன்ற சினிமா பிரபலங்கள் யாத்திரையில் பங்கேற்றனர்.

மத்தியப் பிரதேசத்தில் இருந்து, டிசம்பர் 4ஆம் தேதி ராஜஸ்தானுக்கு யாத்திரை மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT