இந்தியா

205 கிலோ வெங்காயத்துக்கு 9 ரூபாய் தானா? ஏமாற்றப்பட்ட விவசாயி!

1st Dec 2022 07:50 PM

ADVERTISEMENT

 

கர்நாடகத்தில் விவசாயியிடமிருந்து மொத்தவிலைக் கடைக்காரர் ஒருவர், 205 கிலோ வெங்காயம் பெற்றுக்கொண்டு 9 ரூபாய்க்கு ரசீது கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

இந்த வெங்காயத்தை விற்பதற்காக அந்த விவசாயி 415 கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளார். 

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகேவுள்ள யஷ்வந்த்பூர் பகுதியில் மொத்தவிலைக் கடை செயல்பட்டு வருகிறது. இதனிடையே திம்மப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாவடெப்பா ஹல்லிக்கேரி என்ற விவசாயி தான் கொள்முதல் செய்த வெங்காயத்தை மொத்தவிலைக் கடைக்கு கொண்டுசென்றுள்ளார்.

ADVERTISEMENT

மாநிலத்தில் வெங்காயத்தின் விலை குறைவாக உள்ளதால், அதனை கடாக் மாவட்டத்திலிருந்து  415 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பெங்களூரு அருகேவுள்ள யஷ்வந்த்பூருக்கு கொண்டுவந்துள்ளார்.

படிக்கஇந்தப் பாடல்களை ஒலிபரப்பாதீர்கள், வானொலி நிலையங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

வெங்காயங்களை எடுத்துக்கொண்ட வியாபாரி விவசாயிக்கு ரசீது கொடுத்துள்ளார். அந்த ரசீதில் வெங்காயம் விலை குவிண்டாலுக்கு ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

சுமைக்கூலிக்காக ரூ.24 கழித்துக்கொண்டு ரூ.377 கொடுக்க வேண்டும் என ரசீதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் மொத்த விலையில் ரூ.8.36 என ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரசீது இணைய்த்தில் வைரலாகி வருகிறது. 

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் பிரதமர் மோடியின் அரசாங்கம் இதுதான் என பலர் விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையையும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளனர்.

 

 

கர்நாடகத்தில் கடந்த சில நாள்களாகவே தக்காளி, வெங்காயத்தின் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால், மொத்த கொள்முதல் செய்த விவசாயிகள் கடும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ. 2 - ரூ.10 வரை மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் இழப்பை சந்திக்க நேரிடுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

இதனால், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்து வழங்க வேண்டும் என  அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT