இந்தியா

40% பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் ஹைரெக்ட் நிறுவனம்!

1st Dec 2022 01:20 PM

ADVERTISEMENT


புதுதில்லி: பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹைரெக்ட் நிறுவனம் 40 சதவீதம் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பெரிய டெக் நிறுவனங்கள் முதல் சிறிய டெக் நிறுவனங்கள் வரையில் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் உள்ள பல முன்னணி நிறுவனங்களும் வர்த்தகம் குறைந்துள்ள காரணத்தைல் செலவுகளைக் குறைக்கும் எண்ணத்தில் பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 

இந்நிலையில், பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சாட் மூலம் நேரடியாக பணியாளர்களை பணிக்கு தேர்வு செய்யும்  ஹைரெக்ட் நிறுவனம் தனது வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்யும் திட்டமிட்டுள்ளதால் நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 40 சதவீதம் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பணிநீக்க நடவடிக்கையால் சுமார் 200 பேர் பணியாளர்கள் தங்களது பணியை இழக்க நேரிடும். 

இதுகுறித்து ஹைரெக்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜ்தாஸ் கூறுகையில், ஹைரெக்ட் நிறுவனம் தற்போது தனது வர்த்தக மாடலை மொத்தமாக மறுசீரமைப்புச் செய்து வரும் நிலையில், இத்தகைய நடவடிக்கை மிக அவசியமானதாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT