இந்தியா

குஜராத் தேர்தல்: மதியம் 1 மணி நிலவரப்படி 34.48% வாக்குப்பதிவு!

1st Dec 2022 02:54 PM

ADVERTISEMENT

 

குஜராத்தில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் மதியம் 1 மணி நிலவரப்படி சுமார் 34.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

நகர்ப்புறங்கள் மற்றும் பிற மாவட்டங்களை விட பழங்குடியினப் பகுதிகளான தாங், தபி மற்றும் நர்மதாவில் உற்சாகமான வாக்குப்பதிவு நடைபெற்றது. 

அதிகபட்சமாக தபி மாவட்டத்தில் 46.35 % வாக்குகளும், தாங் மாவட்டத்தில் (46.22 சதவீதம்), நர்மதா (45.13 சதவீதம்) வாக்குகளும் பதிவாகியுள்ளன. போர்பந்தர் (30 சதவீதம்), ஜாம்நகர் (30.54 சதவீதம்), ஜூனாகத் (32.96 சதவீதம்), ராஜ்கோட் (32.88 சதவீதம்) மற்றும் சூரத்தில் 33.10 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

ADVERTISEMENT

படிக்க: ஒற்றுமை நடைப்பயணத்தின் ஒருபகுதியாக நடமாடும் நூலகம்!

பல இடங்களில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒருசில இடங்களில் இயந்திரம் பழுதடைந்ததாகப் புகார் எழுந்ததையடுத்து, பின்னர் அது சரிசெய்யப்பட்டது. 

89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சௌராஷ்டிரா, கட்ச் மற்றும் தெற்கு குஜராத் பகுதியில் மதியம் 1 மணி வரை எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடக்கவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT