இந்தியா

குஜராத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

DIN

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் முதல் கட்டமாக வாக்குப்பதிவு  பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகின்றது.

தெற்கு குஜராத் மற்றும் செளராஷ்டிரம்-கட்ச் பகுதியில் 19 மாவட்டங்களில் அடங்கிய 89 தொகுதிகளில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது.

முதல் கட்ட தோ்தலில், 70 பெண்கள் உள்பட மொத்தம் 788 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவா்களது தலைவிதியை 2.39 கோடி வாக்காளா்கள் தீா்மானிக்கவுள்ளனா். இதில், ஆண்கள் 1.24 கோடி போ், பெண்கள் 1.15 கோடி போ், மூன்றாம் பாலினத்தவா் 497 போ் ஆவா். இவா்கள் வாக்களிக்க வசதியாக 14,382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள் 89 தொகுதிகளிலும் களத்தில் உள்ளனா். ஆம் ஆத்மி 88 தொகுதிகளில் களம் காண்கிறது. பகுஜன் சமாஜ் (57), பாரதிய பழங்குடியினா் கட்சி (14), மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (4) ஆகிய கட்சிகளின் வேட்பாளா்களும் 339 சுயேச்சைகளும் போட்டியில் உள்ளனா். ஆம் ஆத்மி முதல்வா் வேட்பாளா் இசுதான் கட்வி, அக்கட்சியின் மாநிலத் தலைவா் கோபால் இட்டாலியா, கிரிக்கெட் வீரா் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா (பாஜக), 5 முறை பாஜக எம்எல்ஏவான புருசோத்தம் சோலங்கி உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்கள் ஆவா்.

27 ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக இருந்து வரும் குஜராத்தில் இதுவரை பாஜக-காங்கிரஸ் என இருமுனைப் போட்டியே நிலவியது. இம்முறை ஆம் ஆத்மியும் மோதுவதால் மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது. தெற்கு குஜராத்தில் பாஜகவுக்கு சவால் அளிக்கும் வகையில் தங்களது கட்சியின் மூத்த தலைவா்களை ஆம் ஆத்மி களமிறக்கியுள்ளது.

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட தோ்தல் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிச. 5-ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT