இந்தியா

அதிக எண்ணிக்கையில் வாக்களியுங்கள்: பிரதமர் மோடி

1st Dec 2022 09:10 AM

ADVERTISEMENT

 

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் தங்களுடைய வாக்குரிமையை செயல்படுத்தும் வகையில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு பிரதமர்  நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் இன்று முதல் கட்டமாக வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தெற்கு குஜராத் மற்றும் செளராஷ்டிரம்-கட்ச் பகுதியில் 19 மாவட்டங்களில் அடங்கிய 89 தொகுதிகளில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது.

முதல் கட்ட தோ்தலில், 70 பெண்கள் உள்பட மொத்தம் 788 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவா்களது தலைவிதியை 2.39 கோடி வாக்காளா்கள் தீா்மானிக்கவுள்ளனா். இதில், ஆண்கள் 1.24 கோடி போ், பெண்கள் 1.15 கோடி போ், மூன்றாம் பாலினத்தவா் 497 போ் ஆவா். இவா்கள் வாக்களிக்க வசதியாக 14,382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதையும் படிக்க | இந்திய-அமெரிக்க கூட்டு போா் பயிற்சி: சீனா புகாா்

27 ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக இருந்து வரும் குஜராத்தில் இதுவரை பாஜக-காங்கிரஸ் என இருமுனைப் போட்டியே நிலவியது. இம்முறை ஆம் ஆத்மியும் மோதுவதால் மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது. 

 

 

இந்நிலையில், குஜராத் பேரவைத் தேர்தலில் அதிக வாக்காளர்கள் வாக்களித்து புதிய சாதனை படைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் ட்விட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: 
இன்று நடைபெறும் குஜராத் தேர்தலில் அதிக வாக்காளர்கள் வாக்களித்து புதிய சாதனை படைக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் தங்களுடைய வாக்குரிமையை செயல்படுத்தும் வகையில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட தோ்தல் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிச. 5-ஆம் தேதி நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT