இந்தியா

காலையில் கோழி கூவுவதைத் தடுக்க காவல்நிலையத்தில் புகார் கொடுத்த மருத்துவர்

1st Dec 2022 01:28 PM

ADVERTISEMENT


அக்கம் -பக்கத்துக்கு வீட்டாருக்கு சண்டை வருவது ஒன்றும் அவ்வளவு முக்கியச் செய்தி எல்லாம் இல்லை. ஆனால், காலை வேளையில், பக்கத்து வீட்டுக்காரர் வளர்க்கும் கோழிகள் கூவுவதைத் தடுக்க வேண்டும் என்று மருத்துவர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதுதான் முக்கிய செய்தியாகியிருக்கிறது.

வழக்கமாக விடிந்து விட்டது என்பதை அந்தக் காலத்தில் கோழிகள் கூவுவதை வைத்துத்தான் கிராம மக்கள் கண்டுபிடித்த எழுந்து தங்களது கடமைகளை ஆற்றுவார்கள்.

இதையும் படிக்க.. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: குற்றமிழைத்தோர் மீது கிரிமினல் நடவடிக்கை அல்ல; துறைரீதியான விசாரணை மட்டுமே!

பிறகு அலாரம், செல்லிடப்பேசிகள் வந்து, கோழிகள் வீடுகளில் இல்லாமல் போன பிறகு அவற்றின் சப்தங்களைக் கேட்பதே அரிதாகிவிட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில்தான், பக்கத்து வீட்டுப் பெண்மணி வளர்க்கும் கோழி, அதிகாலை 5 மணியிலிருந்து கூவத் தொடங்குவதாகவும், நள்ளிரவில் பணி முடிந்து வீட்டுக்கு வரும் தனக்கு இது மிகப்பெரிய தொந்தரவாக இருப்பதாகவும் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிக்க.. கடும் விசாரணையிலும் அமைதியாக இருக்க உதவியது எது? அஃப்தாப் வாக்குமூலம்

இரு தரப்பிலும் காவல்துறை பேசிப் பார்த்துள்ளனர். ஆனால் ஒருவரும் வழிக்கு வருவதாகத் தெரியவில்லை என்பதால், பொதுவிடத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக கோழி வளர்ப்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு காவல்துறையினர் தள்ளப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
 

Tags : Doctor
ADVERTISEMENT
ADVERTISEMENT