இந்தியா

காங்கிரஸ் ஆட்சியில்தான் வறுமை அதிகரித்தது: பிரதமர் மோடி

1st Dec 2022 04:21 PM

ADVERTISEMENT

வறுமையை ஒழிக்க வெறும் முழக்கங்களை மட்டுமே காங்கிரஸ் கொடுத்து வந்ததாகவும், காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் வறுமை அதிகரித்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் வறுமையை ஒழிப்போம் என முழக்கங்களை மட்டும் எழுப்பி மக்களை தவறாக வழிநடத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். குஜராத்தின் சோட்டாதேபூர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் இதனை தெரிவித்தார்.

இதையும் படிக்க: ரூ.1,51,100 சம்பளத்தில் அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

பிரசாரத்தின்போது மேலும் அவர் பேசியதாவது: காங்கிரஸ் பல ஆண்டுகளாக வறுமையை ஒழிப்போம் எனக் கூறி வருகிறது. வறுமையை ஒழிப்பதற்காக மக்கள் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தார்கள். ஆனால், நீங்கள் மக்களை வறுமையை ஒழிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தீர்கள். காங்கிரஸ் செய்தது ஒன்றே ஒன்று தான். முழக்கங்களை எழுப்புவது, வாக்குறுதிகள் அளிப்பது மற்றும் மக்களை தவறாக வழிநடத்துவது. இதுதான் அவர்களின் ஆட்சியில் வறுமை அதிகரிக்கை காரணம். காங்கிரஸ் தலைமையிலான அரசுகளின் கொள்கைகளினால் சாதாரண மக்கள் பொருளாதாரத்தில் தங்களது பங்களிப்பை அளிக்க முடியவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போதிலும் ஏழை மக்களால் அவர்களுக்கென வங்கிக் கணக்கு தொடங்க முடியவில்லை.

ADVERTISEMENT

ஏழை மக்கள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு கல்வி, மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. நாட்டின் மிக உயரியப் பதவிக்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் (திரௌபதி முர்மு) தேர்ந்தெடுக்கப்படுவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால், தங்களது வேட்பாளரை அவருக்கு (திரௌபதி முர்முவுக்கு) எதிராக போட்டியிட செய்தார்கள். முர்மு நாட்டிலுள்ள அனைத்து பழங்குடியின குடும்பங்களுக்கும், குடிமக்களுக்கும் கிடைத்த பெருமை. ஆனால், அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதை காங்கிரஸ் எதிர்த்தது. பழங்குடியினப் பெண் ஒருவரை அவர்கள் நாட்டின் குடியரசுத் தலைவராக பார்க்க விரும்பவில்லை. காங்கிரஸ் முர்முவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தியிருக்கவில்லையென்றால் அவர் ஒருமித்த கருத்தோடு குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் என்றார்.

இதையும் படிக்க: இந்த வாரப் போட்டியில் என்னென்ன படங்கள்?

குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு இன்று (டிசம்பர் 1) முதல் கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வருகிற டிசம்பர் 5-ல் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT