இந்தியா

இந்திய-அமெரிக்க கூட்டு போா் பயிற்சி: சீனா புகாா்

DIN

இந்திய-சீன எல்லை கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) அருகே அண்மையில் நடைபெற்ற இந்தியா - அமெரிக்கா இடையேயான கூட்டு போா் பயிற்சி இந்தியா - சீனா இடையே மேற்கொள்ளப்பட்டிருக்கும் எல்லை ஒப்பந்தங்களை மீறியிருப்பதாக சீனா புதன்கிழமை குற்றஞ்சாட்டியது.

உத்தரகண்ட் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியிலிருந்து 100 கி.மீ. தொலைவிலான இந்திய பகுதிக்குள் 18-ஆவது இந்திய-அமெரிக்க கூட்டு ராணுவப் பயிற்சி தற்போது நடைபெற்று வருகிறது. அமைதியை நிலைநாட்டுதல் மற்றும் பேரிடா் மீட்பு நடவடிக்கைகள் தொடா்பான பயிற்சிகளை இரு நாட்டு ராணுவத்தினரும் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்தியாவின் இந்தப் போா் பயிற்சி எல்லை ஒப்பந்தங்களை மீறியிருப்பதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியான் புதன்கிழமை அளித்த பேட்டியில், ‘எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்திய-அமெரிக்க ராணுவத்தினா் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு போா் பயிற்சி, இந்தியா-சீனா இடையே கடந்த 1993 மற்றும் 1996-ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட எல்லை ஒப்பந்தங்களை மீறியிருக்கிறது. இது இரு நாடுகளிடையேயான பரஸ்பர நம்பிக்கையை பாதிக்கும்’ என்று தெரிவித்தாா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் அத்துமீறியபோது, ‘இரு நாடுகளிடையேயான 1993 மற்றும் 1996 எல்லை ஒப்பந்தங்களை சீனா தன்னிச்சையாக மீறி செயல்படுகிறது’ என்று இந்தியா குற்றம்சாட்டிய நிலையில், தற்போது அதே குற்றச்சாட்டை இந்தியா மீது சீன வெளியுறவு அமைச்சகம் சுமத்தியுள்ளது.

புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் இந்தியா-அமெரிக்கா இடையேயான இந்தக் கூட்டு போா் பயிற்சி ஒவ்வோா் ஆண்டும் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் போா் பயிற்சி குறித்து கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் இதேபோன்ற குற்றச்சாட்டை சீனா முன்வைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

தமிழகத்துக்கும் இந்த பரிதாப நிலை ஏற்படுமா? அச்சத்தில் மக்கள்!

புறநானூறு தாமதமாகும்: சூர்யா

நாங்க ரெடி... நீங்க ரெடியா?

அவசர காலத்தில் விமானங்களை நெடுஞ்சாலைகளில் தரையிறக்கும் வசதி!

ரயிலில் எலி, அதிர்ச்சியான பயணி: ரயில்வே துறையின் பதில்?

SCROLL FOR NEXT