இந்தியா

இந்தப் பாடல்களை ஒலிபரப்பாதீர்கள், வானொலி நிலையங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

1st Dec 2022 06:41 PM

ADVERTISEMENT

ஆல்கஹால், போதைப் பொருள்கள், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி கலாசாரம் போன்றவற்றை மிகைப்படுத்தி வானொலி நிலையங்கள் பாடல் ஒலிபரப்பக் கூடாது என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பு ஒன்றினை மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

இதையும் படிக்க: அடுத்த 4 நாள்கள் எப்படி இருக்கும்? பனி வந்தா மழை வராது என்ற பேச்சைத் தூக்கிப் போடுங்க

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வானொலி நிலையங்கள் கிராண்ட் ஆஃப் பர்மிசன் ஒப்பந்தம் மற்றும் புலம்பெயர் கிராண்ட் ஆஃப் பர்மிசன் ஒப்பந்தத்தில் கூறியுள்ள நிபந்தனைகளின்படி கண்டிப்பாக செயல்பட வேண்டும். இந்த ஒப்பந்தங்களின்படி வன்முறை இடம்பெறும் எந்த ஒரு விஷயத்தையும் வானொலியில் ஒலிபரப்பக் கூடாது. இந்த விதிமுறைகளை மீறினால் அந்த வானொலி நிலையங்கள் சட்டரீதியிலான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் எனக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: டெஸ்டா டி20 கிரிக்கெட்டா?: முதல் நாளில் உலக சாதனைகள் படைத்த இங்கிலாந்து பேட்டர்கள்!

வானொலி நிலையங்களில் ஆல்கஹால், போதைப் பொருள்கள், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி கலாசாரம் போன்றவற்றை மிகைப்படுத்தி பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டதையடுத்து இந்த எச்சரிக்கையினை மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT