இந்தியா

தில்லியில் மதுபானத்திற்குத் தடை! ஏன் தெரியுமா?

1st Dec 2022 03:04 PM

ADVERTISEMENT

 

நாட்டின் தலைநகரான தில்லியில் 3 நாள்களுக்கு மதுபானம் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மாநகராட்சித் தேர்தலையொட்டி நாளை முதல் வாக்குப்பதிவு நடைபெறும் 4ஆம் தேதி வரை மதுபானம் விற்பனைக்குத் தடை விதித்து தில்லி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 

தில்லி மாநகராட்சியிலுள்ள 250 வார்டுகளுக்கும் டிசம்பர் 4ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பதிவான வாக்குகள் டிசம்பர் 7ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 

ADVERTISEMENT

படிக்கஒற்றுமை நடைப்பயணத்தின் ஒருபகுதியாக நடமாடும் நூலகம்!

இந்தத் தோ்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 

இந்நிலையில், மாநகராட்சித் தேர்தலையொட்டி தலைநகரில் டிசம்பர் 2 முதல் 4 வரை மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என கலால் வரித் துறை உத்தரவிட்டுள்ளது. 

அதோடு மட்டுமல்லாமல் வாக்குப்பதிவு நடைபெறும் டிசம்பர் 7ஆம் தேதியும் மதுபான விற்பனைக்குத் தடை விதித்துள்ளது. கிளப், பார்கள் என அனைத்திற்கும் இந்த தடை பொருந்தும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT