இந்தியா

குஜராத் தேர்தல்: 11 மணி நிலவரப்படி 19.13% வாக்குகள் பதிவு! 

1st Dec 2022 12:34 PM

ADVERTISEMENT

 

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், 11 மணி நிலவரத்தைத் தேர்தல் ஆணையம்  வெளியிட்டுள்ளது.

அதன்படி, 11 மணி நிலவரப்படி 19.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

தெற்கு குஜராத் மற்றும் செளராஷ்டிரம்-கட்ச் பகுதியில் 19 மாவட்டங்களில் அடங்கிய 89 தொகுதிகளில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

முதல் கட்ட தோ்தலில், 70 பெண்கள் உள்பட மொத்தம் 788 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவா்களது தலைவிதியை 2.39 கோடி வாக்காளர்கள் தீர்மானிக்கவுள்ளனர். இதில், ஆண்கள் 1.24 கோடி போ், பெண்கள் 1.15 கோடி போ், மூன்றாம் பாலினத்தவா் 497 போ் ஆவா். இவா்கள் வாக்களிக்க வசதியாக 14,382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட தோ்தல் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிச. 5-ஆம் தேதி நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT