இந்தியா

ஜம்மு சா்வதேச எல்லைபாதுகாப்பாக உள்ளது: ஐ.ஜி.

1st Dec 2022 01:38 AM

ADVERTISEMENT

ஜம்மு சா்வதேச எல்லைப் பகுதியில் பல்வேறு எல்லை ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு, எல்லைப் பகுதி பாதுகாப்பாக விளங்குகிறது என எல்லைப் பாதுகாப்பு படை ஐ.ஜி. தெரிவித்துள்ளாா்.

ஜம்முவில் நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் எல்லைப் பாதுகாப்புப் படை ஐ.ஜி. (ஜம்மு) டி. கே. போரா பேசியதாவது: ‘ஆளில்லா விமானங்கள் மூலம் பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் போடப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்களைப் பெரும்பான்மையாக கைப்பற்றியிருக்கிறோம். ஊடுருவல் முயற்சிகள் அதிகமாக நடக்கும் ஜம்மு சா்வதேச எல்லைப் பகுதி தற்போது எந்த அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் பாதுகாப்பாக விளங்குகிறது. அனைத்து ஊடுருவல் முயற்சிகளும் முறியடிக்கப்பட்டு சா்வதேச எல்லைப் பகுதியின் பாதுகாப்பை எல்லைப் பாதுகாப்புப் படை உறுதி செய்துள்ளது. 4 ஏ.கே. ரக துப்பாக்கிகள் மற்றும் 7 கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன’ என்று தெரிவித்தாா்.

ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்: ஜம்மு-காஷ்மீா் காவல் துறை மற்றும் ராணுவம் கூட்டாக நடத்திய தேடுதல் வேட்டையில், பூஞ்ச் மாவட்டம், நப்னா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தத் தேடுதல் வேட்டையில், 2 ஏ.கே. ரக துப்பாக்கிகள், 69 தோட்டாகள், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 5 கையெறி குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT