இந்தியா

சோனியா காந்தி தாயார் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

31st Aug 2022 08:18 PM

ADVERTISEMENT


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தாயாரை இழந்து தவிக்கும் சோனியா காந்திக்கு ஆழ்ந்த இரங்கல். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும். இந்த துக்கமான சூழலில் அவரின் குடும்பத்திற்கு துணை நிற்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 

படிக்கசோனியா காந்தியின் தாயார் காலமானார்

 

ADVERTISEMENT

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ உடல்நலக் குறைவால் இத்தாலியில் கடந்த 27ஆம் தேதி காலமானார். அவரின் இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT