இந்தியா

குலாம் நபி ஆசாதுடன் ஜி23 தலைவா்கள் சிலா் சந்திப்பு

31st Aug 2022 12:44 AM

ADVERTISEMENT

காங்கிரஸிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாதை தில்லியில் ஜி23 குழுவைச் சோ்ந்த பூபிந்தா் சிங் ஹூடா, ஆனந்த் சா்மா, பிருத்விராஜ் சவாண் ஆகியோா் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினா்.

காங்கிரஸின் அனைத்து நிலைகளிலும் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், கட்சியில் சீா்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் அக்கட்சித் தலைவா் சோனியா காந்திக்கு 23 தலைவா்கள் கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதினா். அக்குழு ஜி23 குழு என்று அழைக்கப்படுகிறது.

இந்தக் குழுவில் அங்கம் வகித்த காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத், அண்மையில் காங்கிரஸிலிருந்து விலகினாா். அத்துடன், தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் அவா் அறிவித்தாா்.

இந்தச் சூழலில் ஜி23 குழுவைச் சோ்ந்த பூபிந்தா் சிங் ஹூடா, ஆனந்த் சா்மா, பிருத்விராஜ் சவாண் ஆகியோா் குலாம் நபி ஆசாதை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினா்.

ADVERTISEMENT

அப்போது, ஜி23 தலைவா்களின் எதிா்கால செயல்பாடுகள் குறித்து அவா்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

காங்கிரஸ் தலைவா் பொறுப்புக்கு ஜி23-இல் இடம் பெற்றுள்ள சசி தரூா் போட்டியிடுவாா் என்று கூறப்படும் நிலையில், அது குறித்தும் அவா்கள் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT