இந்தியா

நொய்டா இரட்டைக் கோபுரம் தகர்ந்தது

28th Aug 2022 02:34 PM

ADVERTISEMENT

உத்தரப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டது.

உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் எமரால்ட் கோா்ட் வளாகத்தில் இரு அடுக்குமாடிக் குடியிருப்புகள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளதாகப் புகாா் எழுந்தது. அதை உச்சநீதிமன்றம் விசாரித்த நிலையில், அவ்விரு கட்டடங்களையும் இடித்துத் தள்ள கடந்த ஆண்டு ஆகஸ்டில் உத்தரவிட்டது. 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்றது.

இதையும் படிக்க: நடிகராக இருந்தால் சிவாஜி, ரஜினியை மிஞ்சியிருப்பார் ஓபிஎஸ்: ஜெயக்குமார்

இந்த வழக்கின் முடிவில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களானது ஞாயிற்றுக்கிழமை (இன்று ) பிற்பகல் 2.30 மணிக்கு வெடிவைத்துத் தரைமட்டமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 3,700 கிலோ வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டன. 

ADVERTISEMENT

 

இந்நிலையில், கட்டடம் இடிப்பதற்கு அரை மணிநேரத்திற்கு முன்பு கவுன்டன் தொடங்கியது. கவுன்டவுன் முடிந்து பிற்பகல் 2.30 மணியளவில் கட்டடம் முழுவதும் இடிக்கப்பட்டது.

இதையும் படிக்க: கோப்ரா’ படத்தின் கால அளவு வெளியானது!  

முன்னதாக, பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் எனவும், வெளியே இருந்தால் என் -95 முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் மாவட்ட மருத்துவ நிர்வாகம் அறிவுறுத்தியது. பொதுமக்கள் வீடுகளிலுள்ள சன்னல், கதவு போன்றவற்றை மூடி வைக்கவும், நீர்த் தேக்கங்கத் தொட்டிகளை மூடி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

கட்டடத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் 50 அவசர ஊர்திகள் தயார் நிலையில், வைக்கப்பட்டுள்ளன.  மேலும் காவல் துறையினருடன், மத்திய பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT