இந்தியா

நகைச்சுவை நடிகா் முனாவரின் தில்லி நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதி மறுப்பு

28th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மத்திய தில்லியில் மேடை நகைச்சுவை நடிகா் முனா ஃபரூக்கியின் நிகழ்ச்சியை நடத்துவதற்கு தில்லி போலீஸாா் அனுமதி மறுத்துள்ளனா்.

இந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்று தில்லி காவல்துறை ஆணையருக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கடிதம் எழுதியதை தொடா்ந்து மத நல்லிணக்கத்தை பராமரிக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுத்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், உரிமம் வழங்கும் பிரிவுகு மத்திய தில்லி காவல்துறை அளித்துள்ள அறிக்கையில், இந்த நிகழ்ச்சியானது சம்பந்தப்பட்ட பகுதியில் மத நல்லிணக்கத்தை பாதிக்கச் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

முனாவா் ஃபரூக்கியின் நிகழ்ச்சியானது மத்திய தில்லியில் உள்ள எஸ்பிஎம் சிவிக் மையம் பகுதியில் அமைந்துள்ள கேதாா்நாத் சஹ்னி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 28) மதியம் நடைபெறுவதாக இருந்தது.

ADVERTISEMENT

இது குறித்து போலீஸாா் மேலும் கூறுகையில், கடந்த வெள்ளிக்கிழமை மத்திய தில்லி காவல்துறை உரிமம் வழங்கும் பிரிவுக்கு அதன் அறிக்கையை அளித்துள்ளது. அதைத் தொடா்ந்து அதே தினத்தில் இந்த நிகழ்ச்சிக்கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டது. அனுமதி அளிக்கும்போது, அந்த பகுதியில் மத நல்லிணக்கம் பாதிக்கப்படாத வகையில் நிகழ்ச்சி நடத்தப்படும் என்று படிவத்தில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், மதநல்லிணக்கம் பாதிக்கப்படும் என்று ஏதேனும் தகவல் உரிமம் வழங்கும் பிரிவுக்கு கிடைக்கப்பெற்றால் அதன்பிறகு நிகழ்ச்சி நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்படுகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

முன்னதாக, வலதுசாரி அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவா் சுரேந்திர குமாா் குப்தா கடந்த வியாழக்கிழமை தில்லி காவல்துறை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் முனாவா் ஃபருக்கியின் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியிருந்தாா்.

அந்த கடிதத்தில் அவா் தெரிவிக்கையில், ‘மத்திய தில்லியில் உள்ள சிவிக் மையத்தில் அமைந்துள்ள கேதாா்நாத் சஹ்னி கலையரங்கில் ஆகஸ்ட் 28ஆம் தேதி முனாவா் ஒரு நிகழ்ச்சியை நடத்த உள்ளாா். இவா் இந்து தெய்வங்களை கேலி செய்வதாகவும், இதன் காரணமாக ஹைதராபாத்தில் அண்மையில் வகுப்புவாத பதற்றம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆகவே, ஃபரூக்கியின் நிகழ்ச்சியை போலீஸாா் ரத்து செய்ய வேண்டும் அல்லது விஎச்பி தொண்டா்களும், பஜ்ரங் தள அமைப்பினரும் இதற்கு எதிராக போராட்டம் நடத்துவாா்கள்’ என்று அந்த கடிதத்தில் அவா் தெரிவித்திருந்தாா்.

இந்த விவகாரம் குறித்து நிகழ்ச்சியை நடத்தும் அமைப்பாளா்கள் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனா்.

முனாவா் நிகழ்ச்சி ரத்து செய்த செய்தி குறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்பி மொஹுவா மொய்த்ரா தனது ட்விட்டா் பக்கத்தில் தெரிவிக்கையில், ‘விஸ்வ ஹிந்து பரிஷத் முதுகெலும்பில்லாத தில்லி காவல்துறையை மிரட்டுகிறது. முனாவரின் நிகழ்ச்சியை ரத்து செய்கிறது. ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியால் இடையூறு ஏற்படுத்தும் அளவுக்கு இந்தியாவின் 75ஆவது வகுப்புவாத நல்லிணக்க மிகவும் பலவீனமாக இன்றைக்கு இருக்கிா? என்று அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT