இந்தியா

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண ஆவலோடு காத்திருக்கிறேன்: ராகுல்

28th Aug 2022 10:39 PM

ADVERTISEMENTஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 2 ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

இந்த போட்டியை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஒவ்வொரு இந்தியரும் காக்கிருந்த போட்டிக்கான அந்த நாள் வந்துவிட்டது. ஆசிய கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக நாங்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாக உள்ளோம். நாட்டு மக்கள் மற்றும் என் சார்பாக இந்திய அணிக்கு நல்வாழ்த்துகள் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தற்போது 148 ரன்கள் இலக்குடன் விளையாடி வரும் இந்திய அணி 10 ஓவருக்கு 3 விக்கெட் விழப்புக்கு 62 ரன்களுடன் களத்தில் உள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT