இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: 5 நாள்களில் 13 முறை நிலநடுக்கம்- பொதுமக்கள் பீதி

27th Aug 2022 03:56 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் இன்று மேலும் இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இத்துடன் அங்கு கடந்த 5 நாள்களில் 13 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இன்று அதிகாலை 4.32 மணியளவில் நிலநடுக்கம் உணரப்படடது. இது ரிக்டர் அளவில் 2.9ஆகப் பதிவானது. அதைத்தொடர்ந்து காலை 9.06 மணிக்கு மற்றொரு நிலடுக்கம் ஏற்பட்டது. 

இது ரிக்டர் அளவில் 3.4 ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கங்களால் பெரிய அளவில் பொருள் சேதமோ, உயிா்ச் சேதமோ ஏற்படவில்லை. 

இதையும் படிக்க- குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்: மத்திய அமைச்சர்

ADVERTISEMENT

எனினும், ஜம்மு-காஷ்மிர் பகுதிகளில் தொடா்ந்து நிலநடுக்கம் ஏற்படுவது அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 5 நாள்களில் மட்டும் இதுவரை 13 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT