இந்தியா

அள்ள அள்ள பணம்: பிகார் அரசுப் பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

27th Aug 2022 03:51 PM

ADVERTISEMENT

பிகார்: அள்ள அள்ள பணம்.. பணம் எண்ணும் இயந்திரங்களே திணறும் அளவுக்கு கட்டுக்கட்டாக பணம்.. பிகார் அரசுப் பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையின் போதுதான் இந்தக் காட்சிகள் பதிவானது.

ஒரு மேஜை முழுக்க கட்டுக்கட்டாக பணம் நிறைந்து கிடக்க, அதனை மிகவும் பொறுமையாக இயந்திரங்கள் மூலம் எண்ணும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் அதிகாரிகள். இவ்வளவு கட்டுக்கட்டாக பணமா? என்று அந்த விடியோவைப் பார்க்கும் மக்கள் அடுத்த ரெய்டா? எங்கிருந்துதான் இவ்வளவு பணம் வருகிறதோ என்று அதிகாரிகள் போலவே மலைத்துப் போகிறார்கள்.

இதையும் படிக்க | பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்போர் அறிய வேண்டிய அனைத்துத் தகவல்களும்..

பிகார் அரசிப் பொறியாளர் சஞ்சய் ராய், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை அவரது வீட்டில்  சோதனை நடத்தினார்கள்.

ADVERTISEMENT

அவரது வீட்டில் பெரிதாக பணம் எதுவும் சிக்காத நிலையில், இவரது இளம் பொறியாளர் மற்றும் காசாளரிடம்தான் பணத்தைக் கொடுத்து வைப்பதாகக் கிடைத்தது துப்பு. உடனடியாக இவர்களது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில் அள்ள அள்ள பணம் என்று சொல்வது போல சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு வெறும் 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளாக குவித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ஒரு கோடி மதிப்புள்ள தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பணத்தை எண்ணும் பணியில் பணம் எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பல மணி நேரம் நடைபெற்றுள்ளது. தங்க நகைகளும் எடைபோட்டு மதிப்பிடும் பணிகளும் நடந்துள்ளன.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT