இந்தியா

ஒடிசாவில் 36 புதிய காவல் நிலையங்களைத் திறக்க அரசு முடிவு

27th Aug 2022 04:23 PM

ADVERTISEMENT

 

மக்கள்தொகை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, ஒடிசாவில் 36 புதிய காவல் நிலையங்களைத் திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

இதுதொடர்பான முன்மொழிவுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் சனிக்கிழமை ஒப்புதல் அளித்து, இந்த காவல் நிலையங்களை விரைவில் செயல்பாட்டுக்குக் கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

அங்குல் மாவட்டத்தில் பகேடியா மற்றும் கோபால்பிரசாத், பாலேஸ்வரில் உள்ள கோபால்பூர் மற்றும் அனந்த்பூர், பர்காரில் உள்ள பர்கர் ரூரல், பெர்ஹாம்பூர் காவல் மாவட்டத்தில் நிமகந்தி, புவனேஸ்வர் கமிஷ்னரேட் பகுதியில் மைத்ரி பிகார் மற்றும் ஜார்சுகுடா விமான நிலையம், பூரியில் உள்ள சாரிச்சாக், குர்தா ஆகிய பகுதியில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும். 

ADVERTISEMENT

படிக்க:நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத ஃபரூக் அப்துல்லா!

தற்போதுள்ள காவல் நிலையங்களின் பரப்பளவைப் பிரித்து, தரம் உயர்த்தி இந்த புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த புதிய காவல் நிலையங்களில் காவலர் முதல் ஆய்வாளர் வரை பல்வேறு நிலைகளில் 563 புதிய பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 

இந்த புதிய காவல் நிலையங்கள் திறக்கப்படுவதன் மூலம், மக்களுக்கு சிறந்த காவல் சேவைகளை வழங்குவதில் ஒடிசா காவல்துறையின் முயற்சிகள் மேலும் வலுப்பெறும் என்று முதல்வர் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT