மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
தேசிய நெடுஞ்சாலையில் எண்.43 உள்ள கோடாரு நாலா பகுதிக்கு அருகில் வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் நடைபெற்றது.
இறந்தவர்கள் 20 முதல் 22 வயதுடையவர்கள் என்று பாலுமடா காவல் நிலையப் பொறுப்பாளர் ஜோதன் சிங் தெரிவித்தார்.
படிக்க: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்பு
நண்பரைச் சந்தித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த மூவர் மீது லாரி மோதியது, சம்பவத்திற்குப் பிறகு லாரி ஓட்டுநர் வாகனத்துடன் தப்பிச் சென்றதாக அவர் கூறினார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.