ஆயுதப் படைகளுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்துவதற்காக புதிய ஆயுதப்படை பள்ளியை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று திறந்து வைத்தார்.
இதுதொடர்பாக கேஜரிவால் கூறுகையில்,
உலகின் தலைசிறந்த கல்வி அமைச்சர் மனிஷ் சிசோடியா என்று பாராட்டியுள்ளார். நஜாப்கர் ஜரோடா கலான் கிராமத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆயுதப்படை தயாரிப்பு பள்ளி தில்லியில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
படிக்க: மன அழுத்தத்தில் இருந்தேன்: விராட் கோலி ஒப்புதல்
ஆயுதப் படையில் சேர விரும்பும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான முறையான இடம் இல்லாமல் இருந்தது. தற்போது அதற்கான இடம் அமைக்கப்பட்டுள்ளது. ஏழைகள்கூட சேர்க்கைக்கு வரலாம் என்று அவர் தெரிவித்தார்.
ஆயுதப்படை பள்ளியில் சேர சுமார் 18 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
படிக்க: காதலருடன் சாகச விடியோவைப் பகிர்ந்த பிரியா பவானி ஷங்கர்
இந்த பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு அனைத்தும் இலவசம். இது குடியிருப்புப் பள்ளி. ஆண், பெண் இருபாலருக்கும் விடுதி உள்ளது. சிறந்த வசதிகள் உள்ளன. போட்டி கடுமையாக இருக்கும். 18,000 பேர் விண்ணப்பித்து அதில் 180 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆயுதப்படை பள்ளிக்கு மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.