ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்து சுவரில் மோதிய விபத்தில் 24 குழந்தைகள் காயமடைந்தனர்.
இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மைத் துறை கூறுகையில்,
சோலன் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்தில் திடீரென சில தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ஆர்கி துணைப்பிரிவில் உள்ள மங்கல் என்ற இடத்தில் உள்ள சிமெண்ட் நிறுவனத்திற்கு அருகில் உள்ள சுவரில் மோதியது.
படிக்க: காதலருடன் சாகச விடியோவைப் பகிர்ந்த பிரியா பவானி ஷங்கர்
காயமடைந்த பள்ளி குழந்தைகள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.