இந்தியா

யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான வெறுப்புப் பேச்சு வழக்கு தள்ளுபடி

27th Aug 2022 01:36 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான வெறுப்புப்பேச்சு தொடா்பான மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2007-இல் கோரக்பூா் எம்.பி.யாக யோகி ஆதித்யநாத் பதவி விகித்தபோது, அவரது பேச்சு இரு தரப்பினருக்கு இடையே பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நடைபெற காரணமாக இருந்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு தொடா்பான தீா்ப்பை 2018, பிப்ரவரியில் அளித்த உயா்நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையிலும், யோகி ஆதித்தயநாத் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனுமதி மறுக்கப்பட்டதிலும் எந்தவித நடைமுறை தவறும் இல்லை என்று தெரிவித்திருந்தது.

இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது, விசாரணைக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் தற்போது தலையிட வேண்டியது தேவையற்றது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT