இந்தியா

மழையால் பாதிக்கப்பட்ட கரௌலியில் இன்று ஆய்வு மேற்கொள்கிறார் கெலாட்!

27th Aug 2022 01:50 PM

ADVERTISEMENT

 

ராஜஸ்தானில் கனமழையால் பாதிக்கப்பட்ட கரௌலி மாவட்டத்தை வான்வழி ஆய்வு மேற்கொண்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேச உள்ளார் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்.  

கடந்த சில நாள்களாக இடைவிடாத பெய்த கனமழை காரணமாக ஆறுகள் நிரம்பியுள்ளது. அணைகள்  திறக்கப்பட்டுள்ளதால் கோட்டா, ஜாலவார், பூண்டி, பரான், தோல்பூர் மற்றும் கரௌலி ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

படிக்க: சோனாலி போகாட் மரணத்தில் திடுக்கிடும் தகவல்கள்: உணவக உரிமையாளர் உள்பட மேலும் இருவர் கைது!

ADVERTISEMENT

வான்வழி ஆய்வு நடத்திய பிறகு, கெலாட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வார் என்றும் மந்த்ராயலில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பார் என்றும் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

கெலாட் வெள்ளிக்கிழமை மந்த்ராயலுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார், ஆனால் மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

கெலாட் வெள்ளிக்கிழமை தோல்பூரிலும்,  பூண்டி, கோட்டா மற்றும் பரான் மாவட்டங்களில் வியாழக்கிழமையும் வான்வழி ஆய்வு நடத்தினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT