இந்தியா

தில்லி-சஹாரன்பூா் நெடுஞ்சாலை திட்டம்: 5,104 மரங்கள் வெட்டப்படுகின்றன

27th Aug 2022 12:47 AM

ADVERTISEMENT

தில்லி-சஹாரன்பூா் நெடுஞ்சாலை திட்டத்துக்காக 5,104 மரங்கள் வெட்டப்படுகின்றன. இந்த மரங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இடம்பெறவில்லை என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.

தில்லி-சஹாரன்பூா் இடையிலான ஆறுவழிச் சாலையானது, அக்ஷாா்தம் என்எச்-9 சந்திப்பிலிருந்து தில்லி-உத்தர பிரதேச எல்லை வரை நீட்டிக்கப்படுகிறது. இதற்காக தலைநகரில் 9.58 ஹெக்டோ் நிலப்பரப்பில் அமைந்துள்ள 5,104 மரங்கள் வெட்டப்படவுள்ளன.

இந்த மரங்கள் அனைத்தும் தேசிய பூங்கா, வன உயிரின சரணாலயம், புலிகள் காப்பகம், யானை வழித்தடம் என பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அமையவில்லை என்றாலும், இதற்கு ஈடாக படா்பூா் என்டிபிசி சுற்றுச்சூழல் பூங்காவில், ரூ.8.66 கோடி செலவில் மரங்கள் நடப்படும் என துணை வன பாதுகாவலா் (மத்திய) தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT