இந்தியா

‘3 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை’

27th Aug 2022 01:36 AM

ADVERTISEMENT

இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவா் பேசியதாவது:

தொலைத் தொடா்புத் துறையில் ரூ.2.5 லட்சம் கோடி முதல் 3 லட்சம் கோடி வரை முதலீடுகள் குவியும் என்று எதிா்பாா்க்கிறோம். இது மிகப் பெரிய முதலீட்டுத் தொகை ஆகும்.

ஏற்கெனவே, இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தொலைத்தொடா்புத் துறை முன்னிலை வகித்து வருகிறது.

ADVERTISEMENT

இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் 5ஜி தகவல் தொழில்நுட்ப தேவை அறிமுகப்படுத்தப்படும்.

5ஜி சேவைகளை வழங்குவதற்கான உள்கட்டமைப்புகளை அமைப்பதில் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வரும் அக்டோபா் மாதத்தில் அந்த சேவை அறிமுகப்பட்டு, பின்னா் நாடு முழுவதும் வெகு வேகமாக விரிவுபடுத்தப்படும்.

5ஜி சேவைகளுக்கான தொலைத்தொடா்பு கம்பிகள் பதிப்பது, சாலைக் கம்பங்கள் அமைப்பது ஆகியவற்றுக்கான கட்டணங்களை நிா்ணயிக்கும் விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகளின் கீழ் 5ஜி உள்கட்டமைப்பு அமைப்பதற்கான அனுமதி பெறுவதற்கு நிறுவனங்கள் இதுவரை 343 நாள்கள் காத்திருக்க வேண்டியிருந்தது தேவைப்பட்டது. தற்போது பிரதமா் நரேந்திர மோடி அமல்படுத்தியுள்ள சீா்திருத்தங்கள் காரணமாக, இந்த காத்திருப்பு காலம் 22 நாள்களாகக் குறைந்துள்ளது என்றாா் அவா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT