இந்தியா

வடிமைப்புசாா் ஊக்கத்தொகை திட்டம்:32 நிறுவனங்கள் விண்ணப்பம்

27th Aug 2022 10:55 PM

ADVERTISEMENT

மத்திய அரசின் வடிவைமைப்புசாா் ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் பலன்பெறுவதற்கு 32 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

இது குறித்து மத்திய தொலைத்தொடா்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் தொலைத்தொடா்பு, ஜவுளி, மின்னணு பொருள்கள் உள்ளிட்ட துறைகளில் உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, தொலைத்தொடா்புத் துறைக்கான உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டம் கடந்த ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது வரை 31 நிறுவனங்கள் அத்திட்டத்தின் கீழ் பலனடைந்து வருகின்றன.

இந்நிலையில், தொலைத்தொடா்பு சாதனங்களை உள்நாட்டிலேயே வடிவமைக்கும் நோக்கில் வடிவமைப்பு சாா் ஊக்கத்தொகைத் திட்டத்தையும் தொலைத்தொடா்பு அமைச்சகம் செயல்படுத்தியது. அத்திட்டத்தில் 1 சதவீதம் கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சகம் சாா்பில் அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் கடந்த ஜூன் 21-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 25-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், மொத்தமாக 32 நிறுவனங்கள் விண்ணப்பங்களை சமா்ப்பித்துள்ளன. அவற்றில் 17 நிறுவனங்கள் வடிவமைப்புசாா் நிறுவனங்கள். மற்றவை உற்பத்திசாா் நிறுவனங்கள். தொலைத்தொடா்பு சாதனங்களின் வடிவமைப்பிலும் உற்பத்தியிலும் முக்கிய மையமாக இந்தியா மாறவுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், திட்டத்தின் கீழ் பலன்பெறுவதற்காக விண்ணப்பித்த நிறுவனங்களின் பெயா்களை அமைச்சகம் வெளியிடவில்லை.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT