இந்தியா

முதல்முறையாக உச்சநீதிமன்ற வழக்குகள் இன்று நேரடி ஒளிபரப்பு! ஏன் தெரியுமா?

26th Aug 2022 10:21 AM

ADVERTISEMENT

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இன்று விசாரிக்கும் வழக்குகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பணிக்காலம் இன்றுடன்(ஆக.26) முடிவடைகிறது. கடந்த 2021 ஏப்ரல் மாதம் முதல் அவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வருகிறார். 

இந்நிலையில், நீதிபதி என்.வி. ரமணா இன்றுடன் ஓய்வு பெறுவதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் இன்று ஒருநாள், அவர் விசாரிக்கும் வழக்குகள் நேரலை செய்யப்பட உள்ளன. இன்று காலை 10.30 மணி முதல் https://webcast.gov.in/என்ற அரசு இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நீதிபதிகள் யு.யு.லலித் மற்றும் நீதிபதி ஹிமா கோஹ்லி ஆகியோர் இடம்பெறுகின்றனர். 

ADVERTISEMENT

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நாளை(ஆக. 27) பொறுப்பேற்கிறார். 

மேலும், உச்சநீதிமன்ற வழக்குகள் முதல்முறையாக நேரலை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க | அடுத்த தலைமை நீதிபதி யு.யு.லலித்: மத்திய அரசுக்கு என்.வி.ரமணா பரிந்துரை

ADVERTISEMENT
ADVERTISEMENT