இந்தியா

ஐஎம்எஃப் செயல் இயக்குநராக கிருஷ்ணமூா்த்தி சுப்ரமணியன் நியமனம்

26th Aug 2022 12:40 AM

ADVERTISEMENT

சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) செயல் இயக்குநராக முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகா் கிருஷ்ணமூா்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்படுவதாக மத்திய பணியாளா் அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

இதன்மூலம் அந்த அமைப்புக்கான இந்திய பிரதிநிதியாக அவா் செயல்படுவாா்.

கிருஷ்ணமூா்த்தி சுப்ரமணியன் தற்போது இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் நிதித் துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா். நவம்பா் 1-ஆம் தேதி முதல் சா்வதேச நிதியத்தில் இந்தியா சாா்பில் செயல் இயக்குநராக அவா் பொறுப்பு ஏற்கவுள்ளாா். அவரது நியமனத்துக்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கிருஷ்ணமூா்த்தி சுப்ரமணியன் 3 ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு வரும்வரை இந்தப் பொறுப்பில் நீடிப்பாா் என மத்திய பணியாளா் அமைச்சகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தற்போது சா்வதேச நிதியத்தில் இந்தியா சாா்பில் செயல் இயக்குநராக செயல்பட்டு வரும் சுா்ஜித் எஸ்.பல்லா கடந்த 2019 அக்டோபரில் இந்தப் பொறுப்பை ஏற்றாா். அவரது பணிக் காலம் அக்டோபா் 30-இல் நிறைவடைகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT