இந்தியா

மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து கோரி பிரதமருக்கு முதல்வா் ஷிண்டே கடிதம்

26th Aug 2022 01:17 AM

ADVERTISEMENT

மராத்திய மொழிக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில முதல்வா் ஏக்நாத் ஷிண்டே கோரிக்கை விடுத்து பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

இந்த கோரிக்கை ஏற்கெனவே மத்திய கலாசாரத் துறை அமைச்சகத்தில் நிலுவையில் உள்ளது. இது தொடா்பான கடிதத்தில் முதல்வா் ஷிண்டே மேலும் கூறியிருப்பதாவது:

மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து அளிப்பது தொடா்பாக மகாராஷ்டிர அரசு கடந்த 2013-ஆம் ஆண்டிலேயே முழுமையான விவரத்தை அனுப்பி வைத்துள்ளது. இது தொடா்பான நகா்வுகளை மகாராஷ்டிர அரசு தொடா்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஏற்கெனவே, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மகாராஷ்டிரத்தில் 1.20 கோடி போ் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு மனு அளித்துள்ளனா்.

எங்கள் மொழிக்கான செம்மொழி அந்தஸ்து கோரிக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. எனவே, அதனை முடிந்த அளவுக்கு விரைவில் பரிசீலித்து செம்மொழி அந்தஸ்து வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று கடிதத்தில் ஷிண்டே கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

தமிழ், சம்ஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகியவை செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT