இந்தியா

அசாமின் லக்கிம்பூரில் பிரசாதம் சாப்பிட்ட 70 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

26th Aug 2022 06:33 PM

ADVERTISEMENT

அசாமின் லக்கிம்பூரில் மத நிகழ்வில் பிரசாதம் சாப்பிட்ட 70 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அசாம் மாநிலம், லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள நாராயண்பூர் அருகே பான்பரி பகுதியில் புதன்கிழமை இரவு நடைபெற்ற மத நிகழ்வில் பிரசாதம் சாப்பிட்டவர்களுக்கு திடீரென வயிற்றுவலி மற்றும் வாந்தி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டது. இதுகுறித்து மறுநாள் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிய வரவே சம்பவ இடத்துக்கு விரைந்த அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

இதையும் படிக்க- அதிக நன்கொடை பெற்ற அரசியல் கட்சி எது?

நாராயண்பூர் மருத்துவமனையின் மருத்துவர் கோகோய் கூறுகையில், ஆகஸ்ட் 24 இரவு நடந்த மத நிகழ்ச்சியில் கிராம மக்கள் சிலர் பங்கேற்றிருக்கின்றனர். அப்போது பிரசாதம் சாப்பிட்ட சிலருக்கு வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து இன்று 22 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் உட்பட சுமார் 32 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

ADVERTISEMENT

அத்துடன் 10 பெண்கள் உட்பட மேலும் 19 பேரையும் அனுமதித்துள்ளோம்.

அவர்களுக்கு சிகிச்சை வழங்கியுள்ளோம். மேலும் பலருக்கு வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதாக புகார் வந்துள்ளது என்றார். இச்சம்பவம் லக்கிம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Tags : Assam
ADVERTISEMENT
ADVERTISEMENT