இந்தியா

வாட்ஸ்-ஆப் அட்மின்களுக்கு புதிய வசதி விரைவில் அறிமுகம்

22nd Aug 2022 06:01 PM

ADVERTISEMENT


சான் ஃபிரான்சிஸ்கோ: வாட்ஸ்-ஆப் குழுக்களில் நீக்கிய தகவல்களை அட்மின்கள் மீட்டெடுக்கும் வசதியை ஏற்கனவே அறிமுகப்படுத்திய வாட்ஸ்-ஆப், தற்போது அட்மின்களுக்கு மேலும் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்துகிறது.

இதையும் படிக்க.. யுபிஐ பரிவர்த்தனைக்குக் கட்டணமா? ஆர்பிஐ தரும் விளக்கம்

ஒரு வாட்ஸ்-ஆப் குழுவில், யார் பதிவிட்ட ஒரு தகவலையும், அட்மினால் டெலீட் அல்லது நீக்கம் செய்ய முடியும். இந்த வசதி தற்போது பரிசோதனையில் உள்ளது. இது விரைவில் ஒரு சில பீட்டா டெஸ்டர்களுக்கு அறிமுகமாகவிருக்கிறது.

இந்த வசதி அனைவரின் வாட்ஸ்-ஆப்பிலும் வருவதற்கு சில காலம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதையும் படிக்க.. நூற்றுக்கணக்கான கடன் செயலிகளின் பின்னணியில் சீனம்: மிகப்பெரிய சதி கண்டுபிடிப்பு

இது குறித்து வாட்ஸ்-ஆப் நிறுவனம் கூறியிருப்பது என்னவென்றால், நீங்கள் ஒரு வாட்ஸ்-ஆப் குழுவின் அட்மினாக இருந்தாலும், அதில் வரும் மற்றவர்களின் தகவல்களை நீக்கம் செய்ய முடியாது. எனவே, இன்னும் சிறிது காலம் காத்திருங்கள். யார் பதிவிடும் தகவலையும் உங்களால் நீக்கம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT