இந்தியா

ஜார்க்கண்டில் மின்சாரம் பாய்ந்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம், ஒப்பந்த வேலை

22nd Aug 2022 01:13 PM

ADVERTISEMENT

 


ஜார்க்கண்டின், ராஞ்சி மாவட்டத்தில் தேசியக் கொடி ஏற்றும்போது  தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம், ஒப்பந்த வேலை விரைவில் அளிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். 

தாக்கூர் மாவட்டத்தின் கான்கே தொகுதிக்குள்பட்ட அர்சண்டே கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களை மாநில குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மிதிலேஷ் குமார் ஞாயிறன்று சந்தித்தார். 

அப்போது அவர், முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவுறுத்தியபடி, குடும்ப உறுப்பினர்களுக்கு ஓரிரு நாள்களில் அரசு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். 

ADVERTISEMENT

படிக்க: பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டாம் இருந்தால் நாடு எப்படி முன்னேறும்?: கேஜரிவால்

மேலும், குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ஒப்பந்த வேலை வழங்கப்படும் என்று அமைச்சர் கூறினார். 

சுதந்திர தினத்தை முன்னிட்டு, மூவர்ணக் கொடியை வீட்டின் மேற்கூரையில் ஏற்றிக்கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி 20 வயது மதிக்கத்தக்க மூவரும் உயிரிழந்தனர். 

தேசியக் கொடியை ஏற்றுவதற்கு அவர்கள் பயன்படுத்திய உலோகக் கம்பி, அவர்களது வீட்டின் அருகே இருந்த உயர் அழுத்தக் கம்பியின் மீது உரசியதால், மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT