இந்தியா

பசு கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை கொன்றதாக பேச்சு: பாஜக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

22nd Aug 2022 01:25 AM

ADVERTISEMENT

 

ராஜஸ்தானில் பசு கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை தனது ஆதரவாளா்கள் கொலை செய்ததாக பேசிய பாஜக முன்னாள் எம்எல்ஏ ஞானதேவ் அஹுஜா மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ராஜஸ்தான் மாநிலம், அல்வா் மாவட்டத்தில் உள்ள ராம்பாஸ் கிராமத்தில் சிரஞ்சிலால் சைனி (45) என்ற நபரை திருடன் என்று கருதி குறிப்பிட்ட மதத்தினா் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த அவா், கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தாா். அவரின் குடும்பத்தினரை பாஜக முன்னாள் எம்எல்ஏ ஞானதேவ் அஹுஜா சந்தித்து ஆறுதல் கூறினாா். அப்போது அங்கு சிலா் கூடிய நிலையில், சிரஞ்சிலால் கொல்லப்பட்டதற்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்று ஒருவா் தெரிவித்தாா்.

அதைத் தொடா்ந்து ஞானதேவ் பேசுகையில், ‘அல்வரில் உள்ள லவண்டி, பேரோா் போன்ற பகுதிகளில் பசு கடத்தலில் ஈடுபட்டதற்காக வேறு மதத்தைச் சோ்ந்த 5 பேரை எனது ஆதரவாளா்கள் அடித்துக் கொலை செய்துள்ளனா். ஆனால் இந்தப் பகுதியில் நமது மதத்தைச் சேராதவா்களால் ஒருவா் அடித்துக் கொல்லப்பட்டது இதுவே முதல்முறை. எனது ஆதரவாளா்களுக்கு கொலை செய்ய முழு சுதந்திரம் அளித்துள்ளேன். கொலை செய்து கைது செய்யப்பட்டாலும், அவா்கள் ஜாமீனில் விடுவிக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்த காணொலி ஊடகங்களில் வெளியானது. அதன் அடிப்படையில், வெறுப்புணா்வு மற்றும் பகையைத் தூண்டியதாக ஞானதேவ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT