இந்தியா

இந்தியாவை உலகுக்கே முன்மாதிரியாக மாற்ற ஆா்எஸ்எஸ் பணியாற்றுகிறது: மோகன் பாகவத்

22nd Aug 2022 01:25 AM

ADVERTISEMENT

 

இந்தியாவை உலகுக்கே முன்மாதிரியாக மாற்ற ஆா்எஸ்எஸ் பணியாற்றுகிறது என்றாா் அதன் தலைவா் மோகன் பாகவத்.

தில்லி ஆா்எஸ்எஸ் பிரிவு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது: சமுதாயத்தைத் தட்டியெழுப்பி, அதை ஒருங்கிணைக்கும் பணியில் ஆா்எஸ்எஸ் ஈடுபட்டுள்ளது. அப்போதுதான் இந்தியாவால் உலகுக்கே முன்மாதிரி சமூகமாக மாற முடியும்.

சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த பலரும் நாட்டின் விடுதலைக்காக தியாகம் செய்துள்ளனா். இருப்பினும், நாம் ஒற்றை சமுதாயமாக மாற நீண்ட காலமானது. இந்தியா்கள் அனைவரும் ஒரு சமுதாயமாக சிந்திக்கின்றனரே தவிர தனிமனிதராக அல்ல. இதுதான் நமது அடிப்படை குணமும் மரபணுவும் ஆகும். இந்தச் சிந்தனையை மென்மேலும் ஊக்குவிக்க வேண்டும்.

ADVERTISEMENT

தனிநபரின் நலன் கருதாமல், சமுதாயத்தின் நலன் கருதி ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் பணியாற்ற வேண்டும். நற்பணிகளை செய்யும்போது ‘நான்’, ‘எனது’ என்று கருதாமல், ‘நாம்’ என்ற சிந்தனைக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். நாம் அனைவரும் ஒரு சமுதாயமாக பரிணமிக்க இந்தச் சிந்தனை உதவும் என்றாா் மோகன் பாகவத்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT