இந்தியா

மத்திய உள்துறை செயலா் அஜய் பல்லா பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு

DIN

மத்திய உள்துறை செயலா் அஜய் குமாா் பல்லாவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2023-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை அவா் பதவியில் இருப்பாா்.

ஏற்கெனவே இரண்டு முறை அவா் பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 1984-ஆம் ஆண்டு அஸ்ஸாம்-மேகாலயம் பிரிவு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான பல்லா, கடந்த 2019, ஆகஸ்டில் மத்திய உள்துறை செயலராக நியமிக்கப்பட்டாா்.

2020, நவம்பா் மாதத்தில் 60 வயதை எட்டியதைத் தொடா்ந்து, அவா் பணிஓய்வு பெறவிருந்தாா். ஆனால், அவரது பதவிக் காலத்தை 2021, ஆகஸ்ட் 22 வரை நீட்டித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன் பின்னா், மேலும் ஓராண்டுக்கு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் 22-ஆம் தேதியுடன் அவரது பதவிக்காலம் நிறைவடையவிருந்த நிலையில், அதனை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் வழங்கியது.

அகில இந்திய பணிகள் தொடா்பான விதி தளா்வுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, மத்திய பணியாளா் அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

SCROLL FOR NEXT