இந்தியா

போலியான போலீஸ் ஸ்டேஷனைக் காட்டிக் கொடுத்த துப்பாக்கி

DIN

பிகார் மாநிலம் பங்கா பகுதியில் இயங்கிவந்த போலியான காவல்நிலையம் கண்டுபிடிக்கப்பட்டு 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

சுமார் 8 மாதங்களாக இயங்கி வந்த இந்த போலியான காவல்நிலையம், நகர காவல்நிலையம் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் வீட்டுக்கு மிக அருகே இருந்ததும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் வழக்கமாக காவலர்கள் அணியும் சீருடை அணிந்திருந்ததும், உதவி ஆய்வாளர்கள் மற்றும் டிஎஸ்பி சீருடைகளையும் பயன்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், நகர காவல் நிலையத்துக்கு அருகே காவல்துறை சீருடையில், அரசு வழங்கும் துப்பாக்கியில்லாமல், நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்ததைக் கவனித்தார்.

உடனடியாக அவர்களை அழைத்து விசாரித்தபோதுதான், போலி காவலர்கள் என்பதும், அவர்கள் 8 மாதங்களக போலி காவல்நிலையம் நடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.

விருந்தினர் மாளிகை ஒன்றில், மிகக் கச்சிதமாக காவல்நிலையத்தை வடிவமைத்திருப்பதும், சாதாரண எளிய மக்கள் இதன் வேறுபாட்டைக் கண்டறிவது கடினம் என்றும் விசாரித்து வரும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT